Map Graph

பஞ்சாரா ஹில்ஸ்

பஞ்சாரா ஹில்ஸ் என்பது தெலங்காணாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஓர் நகர்ப்புற வணிக மையமாகும். மேலும், இது இந்தியாவின் மிகவும் வசதியான சுற்றுப்புறங்களில் ஒன்றாகும். இது ஜூபிளி ஹில்ஸுக்கு நெருக்கமான ஒரு சந்தைப் பகுதியாகவும் இருக்கிறது. இந்த பகுதி ஒரு மலைப்பாங்கான காடாக இருந்தது. கடந்த காலத்தில் குறைவான மக்களே இங்கு வசித்து வந்தனர். நிசாமின் வம்சத்தின் சில அரச வம்சத்தினர் மட்டுமே இங்கு வாழ்ந்தனர். இது அவர்களுக்கு வேட்டையாடும் இடமாக இருந்தது. அதன் வரலாறு மற்றும் அந்தஸ்துடன் கூட, இந்த பகுதி இப்போது முற்றிலும் நகர்ப்புற வணிக மையமாக மாற்றப்பட்டுள்ளது. இது உயர்நிலை தங்கும் விடுதிகள், உணவகங்கள், இரவு விடுதிகள் மற்றும் உலகளாவிய நிறுவனங்களின் அலுவலக கட்டிடங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பஞ்சாரா ஹில்ஸ் அதன் சாலை எண்களால் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சாலையும் அதன் சொந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன: எண்கள் 1 இலிருந்து தொடங்கி 14 இல் முடிவடையும்.

Read article
படிமம்:Taj_banjarahills_hyderabad.jpgபடிமம்:India_Telangana_location_map.svgபடிமம்:India_location_map.svg